விஜய் சேதுபதியின் 51-வது படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு
|விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் தனது 51-வது பட தலைப்பு நாளை அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படம் மகாராஜா என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது 51 வது படத்தை ஆறுமுககுமார் என்ற இயக்குனர் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்தது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தை இயக்கிய நிலையில் தற்போது 51 வது படத்தையும் இயக்கி முடித்து விட்டார் என்றே தெரிகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் தனது 51-வது பட தலைப்பு நாளை அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் டைட்டில் ஏற்கனவே கசிந்து விட்டதாகவும் 'சத்தியமா பொய்' என்ற டைட்டில் தான் நாளை வெளியாக இருப்பதாகவும் இணையத்தில் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.