< Back
சினிமா செய்திகள்
பசங்க பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி?
சினிமா செய்திகள்

'பசங்க' பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி?

தினத்தந்தி
|
23 Jun 2024 9:14 AM IST

விஜய் சேதுபதியின் 52-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும், நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன. இப்படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்தநிலையில், ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் 52-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை, பசங்க படத்தை இயக்கி பிரபலமான பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதல் முறையாக இருவரும் இணையும் படமாக இது அமையும்.

மேலும் செய்திகள்