< Back
சினிமா செய்திகள்
கோவிலில் தீண்டாமை கொடுமையா? யோகிபாபு விளக்கம்
சினிமா செய்திகள்

கோவிலில் தீண்டாமை கொடுமையா? யோகிபாபு விளக்கம்

தினத்தந்தி
|
11 Aug 2023 10:25 AM IST

யோகி பாபுவே, எந்த தீண்டாமை கொடுமையும் அரங்கேறவில்லை என்று விளக்கம் அளித்து இருக்கிறார்

முன்னணி நடிகர்களின் கால்ஷீட் கூட பெற்று விடலாம், இவரது கால்ஷீட் பெறுவது கடினம் என்று கூறும் அளவுக்கு பிசியான நடிகராக மாறிப் போயிருக்கிறார், யோகிபாபு.

தீவிர முருக பக்தரான யோகி பாபு, சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். இதுகுறித்த ஒரு வீடியோ காட்சி தற்போது வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் பூசாரியிடம் யோகி பாபு கைகொடுக்க செல்வது போலவும், அதற்கு பூசாரி கை கொடுக்காமல் பேசுவது போலவும் இருப்பதால் நவீன தீண்டாமை என்று சிலர் விமர்சிக்க தொடங்கினர். இதனால் பரபரப்பு எழுந்தது.

ஆனால் உண்மையிலேயே நடந்தது என்ன? என்பது தெரிய வந்திருக்கிறது. பூசாரி அணிந்திருக்கும் முருகன் டாலர் பதித்த மாலை தன் கண்ணை கவர்ந்திருப்பதாகவும், அதை எங்கே வாங்கினீர்கள்? என்றும் யோகிபாபு கேட்டுள்ளார். அதற்கு அந்த பூசாரியும் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர் வாங்கி வந்ததாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து யோகி பாபுவே, எந்த தீண்டாமை கொடுமையும் அரங்கேறவில்லை என்றும், அந்த பூசாரி மிகவும் நல்லவர் என்றும் விளக்கம் அளித்து இருக்கிறார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்