சிங்கம் 4 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குனர் ஹரி
|இயக்குனர் ஹரியும் சூர்யாவும் 2020 ல் ஐந்தாவது முறையாக 'அருவா' என்ற படத்திற்காக இணைந்தனர்.
சென்னை,
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் வெளியாகின. அதுவும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், சிங்கம் நான்காம் பாகம் எடுப்பது குறித்து இயக்குனர் ஹரி அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹரியிடம் சிங்கம் 4 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது,
'நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 குறித்து கேள்வி கேட்கின்றனர். அந்த படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் நான்காம் பாகத்தையும் ஹிட்டாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதனால் அந்த படத்திற்காக நான் அதிக நேரம் செலவிட்டு கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் எப்போது சிங்கம் 4 உருவாகுமென்பதை காலம்தான் தீர்மானிக்கும். இப்போதைக்கு சிங்கம் 4 குறித்த எந்த ஐடியாவும் இல்லை' என்று கூறியுள்ளார்.
இயக்குனர் ஹரியும் சூர்யாவும் 2020 ல் ஐந்தாவது முறையாக 'அருவா' என்ற படத்திற்காக இணைந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக அது கிடப்பில் போடப்பட்டது. இதனால், சூர்யாவுக்கும், ஹரிக்கும் இடையே நல்லுறவு இல்லை என்று வதந்தி பரப்பப்பட்டது.
ஹரி தற்போது அந்த வதந்திகளை முடக்கி, இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.