< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விளம்பர படத்தில் நடிக்க சமந்தாவுக்கு இவ்வளவு சம்பளமா?
|20 March 2024 2:30 PM IST
மயோசிடிஸ் நோய் பாதிப்பில் சிக்கியதால் சமந்தா ஒரு வருடம் நடிக்காமல் இருந்தார்.
சென்னை,
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
அதன்பிறகு மயோசிடிஸ் நோய் பாதிப்பில் சிக்கியதால் ஒரு வருடம் நடிக்காமல் இருந்தார். சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். தற்போது, புதிய இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் விளம்பர படங்களில் நடிக்கவும் சமந்தா ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் நடிக்க ரூ.8 கோடியும், வெப் தொடரில் நடிக்க ரூ.12 கோடியும் கேட்கிறார் என்கின்றனர்.