< Back
சினிமா செய்திகள்
தெலுங்கு நடிகருடன் ராஷ்மிகா காதலா?
சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகருடன் ராஷ்மிகா காதலா?

தினத்தந்தி
|
5 May 2023 6:30 AM IST

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்து இருக்கிறார். பல மொழிகளில் வெளியான புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்த நிலையில் ராஷ்மிகாவும் தெலுங்கு இளம் நடிகர் பெல்லம்கொண்டா சீனிவாசும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் தெலுங்கு பட உலகில் பேச்சு கிளம்பி உள்ளது. பொது நிகழ்ச்சிகள், பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்கும் புகைப்படங்களும் வெளிவந்தன. இதற்கு பெல்லம் கொண்டா சீனிவாஸ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நானும், ராஷ்மிகாவும் காதலிக்கிறோம் என்ற தகவல் எப்படி வெளியானது என்றே தெரியவில்லை. நாங்கள் காதலிக்கவில்லை. நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம். நாங்கள் இருவரும் அடிக்கடி ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று வருவதால் விமான நிலையத்தில் சந்தித்து கொள்கிறோம்.

அதை வைத்து இதுபோன்ற கிசுகிசுக்கள் வருகின்றன. ராஷ்மிகா சுறுசுறுப்பான நடிகை. எப்போதும் அவர் இப்படியே இருக்க வேண்டும்'' என்றார்.

மேலும் செய்திகள்