பிரபாசுக்கு விருந்து வைக்க ஆசைப்படும் பாயல் ராஜ்புத்
|பிரபல நடிகையான பாயல் ராஜ்புத், பிரபாசுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய விரும்புவதாக கூறினார்.
மும்பை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
சமீபத்தில் நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்டோரி இணையத்தில் வைரலானது. அதை பார்த்த ரசிகர்கள் பிரபாஸ் திருமணத்திற்கு தயாராகி விட்டார், அதைப்பற்றி தான் பேசப்போகிறார் என திரை உலகினர் மத்தியில் பரபரப்பு பற்றி கொண்டது. ஆனால் இது கல்கி 2898 ஏ.டி படத்தை குறித்த பதிவு என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல நடிகையான பாயல் ராஜ்புத், பிரபாஸ் பற்றி கூறியிருப்பது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது,
பிரபாசை எனக்கு மிகவும் பிடிக்கும். பிரபாசுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். அவர் என்ன கேட்டாலும் நான் செய்ய வேண்டும். ராஜ்மா சாதம் எனக்கு மிகவும் பிடித்த உணவு. அந்த உணவை ஸ்பெஷலாக சமைத்து பிரபாசுக்கு என் கையால் ஊட்டுவேன். வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன். எல்லாம் என் கையால் செய்வேன் என்று கூறினார்.
பாயலின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் ஆர்.எக்ஸ்.100 என்ற தனது முதல் படத்திலேயே எல்லையில்லாத கவர்ச்சியில் தைரியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.