நடிகை கிருத்தி சனோனுடன் காதலில் நடிகர் பிரபாஸ்
|நடிகர் பிரபாஸுக்கும், ஆதிபுருஷ் படத்தின் நாயகி கிருத்தி சனோனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான பிரபாஸ் தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்துள்ளார். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் பிரபாஸ் படங்களை தெலுங்கில் எடுத்து தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியிட்டு வசூல் பார்க்கிறார்கள். 42 வயதாகும் பிரபாசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகை அனுஷ்காவும் பிரபாசும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளியாகி அடங்கியது. இந்த நிலையில் தற்போது பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோனுக்கும் பிரபாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமாயண கதையை தழுவி எடுக்கப்படும் ஆதிபுருஷ் புராண படத்தில் பிரபாஸ் ராமராகவும் கிருத்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஓட்டல்களில் ரகசியமாக சந்தித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் பேசி வருகிறார்கள். ஆனாலும் இருவர் தரப்பிலும் காதலை உறுதிப்படுத்தவில்லை.