< Back
சினிமா செய்திகள்
கைதி பட  இணை இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் இணையும் கவின் - நயன்தாரா
சினிமா செய்திகள்

'கைதி' பட இணை இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் இணையும் கவின் - நயன்தாரா

தினத்தந்தி
|
23 May 2024 9:22 PM IST

கவின் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கவின். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள நடிகர் கவின் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வரிசையில், ஸ்டார் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் 'பிளடி பகர் ' படத்திலும், அருண் இயக்கும் 'ஊர் குருவி' படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், கவின் நடிக்கும் அடுத்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எழுத்தாளரும், பாடலாசிரியருமான விஷ்ணு இடவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக விஷ்ணு இடவன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இதுதவிர லியோ மற்றும் டாடா படங்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்