< Back
சினிமா செய்திகள்
யாஷுடன் இணைந்து நடிக்கிறாரா கரீனா கபூர்?
சினிமா செய்திகள்

யாஷுடன் இணைந்து நடிக்கிறாரா கரீனா கபூர்?

தினத்தந்தி
|
19 March 2024 10:09 AM IST

முதன்முறையாக, மிகப்பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் நடிக்கிறேன் என்று கரீனா கபூர் கூறினார்.

மும்பை,

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1 மற்றும் 2ம் பாகம் படங்கள் இவரை உலக அளவில் பிரபலமடைய செய்தது. இந்நிலையில் நடிகர் யாஷ் தனது 19வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'டாக்ஸிக்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் 2025ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கரீனா கபூர் முதல்முறையாக தென்னிந்திய சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ஜப் வி மெட்', 'ஓம்காரா', 'தேவ்' எனப் பல படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார் கரீனா கபூர்.

2012 ம் ஆண்டு நடிகர் சையித் அலிகானை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். தற்போது சினிமா, விளம்பரம் என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், ரசிகர்களுடன் உரையாடிய கரீனா கபூர் முதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் நடிப்பதாக கூறினார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "முதன்முறையாக, மிகப்பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் நடிக்கிறேன். பான் இந்தியா படமான இதன் படப்பிடிப்பு எங்கு நடக்க இருக்கிறது என்பது தற்போது தெரியவில்லை. இதை என் ரசிகர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியிருக்கிறார். இனைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கரீனா கபூர் சொன்ன தென்னிந்திய படம் டாக்ஸிக் எனவும் யாஷுடன் இணைந்து நடிக்க போவதாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே யாஷின் 19 வது திரைப்படமான 'டாக்ஸிக்' திரைப்படத்தில் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்