< Back
சினிமா செய்திகள்
வில்லனாகும் கமல்?
சினிமா செய்திகள்

வில்லனாகும் கமல்?

தினத்தந்தி
|
18 Jun 2023 10:52 AM IST

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் மகாநடி படத்தை இயக்கி பிரபலமானவர் நாக் அஸ்வின். இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வந்தது. சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.

நாக் அஸ்வின் தற்போது பிரபாஸ் கதாநாயகான நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இதில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பிரபல நட்சத்திர பட்டாளம் நடிக்க உள்ளனர். ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்