< Back
சினிமா செய்திகள்
காதலிச்சவரை திருமணம் செய்து கொள்வது தவறா...? நடிகை பிரியாமணி ஆவேசம்
சினிமா செய்திகள்

காதலிச்சவரை திருமணம் செய்து கொள்வது தவறா...? நடிகை பிரியாமணி ஆவேசம்

தினத்தந்தி
|
27 Jun 2023 2:50 PM IST

நடிகை பிரியாமணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார்.

பெங்களூரு

பருத்தி வீரன் படத்தில் தேசிய விருதை பெற்று தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார், பேமிலிமேன் வெப் தொடர் இந்தியா முழுவதும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

கடந்த 2017ம் ஆண்டு பிரியாமணி தொழிலதிபர் முஸ்தபா ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெங்களூரில் பதிவு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின. இதனை அவர் மறுத்து உள்ளார்.

நடிகை பிரியாமணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது? என்று விளக்கினார். சமூக வலைதளங்கள் விமர்சனம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரியாமணி அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

விமர்சனங்கள் குறித்து நான் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.அதில் அதிக கவனம் செலுத்தி அதற்கு பதிலளித்தால் அது மேலும் அதிகரிக்கும்.

நான் திருமணம் ஆனவுடன் நான் மிகவும் விமர்சனம் செய்யப்பட்டேன், நீங்கள் ஏன் உங்கள் மதத்தை விட்டு வெளியேறினீர்கள் என்று நிறைய பேர் கேட்டார்கள். நீங்கள் வேறு மத நபரை திருமணம் செய்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் ஜிஹாதிகளாக பிறப்பார்கள். இது லவ் ஜிஹாத் என கூறினார்கள்.

எனக்கும் கணவருக்கும் பிரச்சினை என்று பேசினர். கணவரை விவாகரத்து செய்யும்படியும் நிர்ப்பந்தித்தனர். எங்கள் திருமண வாழ்க்கை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. திருமண வாழ்க்கை குறித்து வலைத்தளத்தில் வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.

காதலிச்சவரை திருமணம் செய்து கொள்வது தவறா? முஸ்தபா ராஜா வேறு மததை சேர்ந்தவர் என்பதில் என்ன தவறு? எல்லா முஸ்லீம்களும் ஐஎஸ்ஐஎஸ் அல்ல,எல்லோரும் லவ் ஜிஹாத் அல்ல.கொஞ்சம் புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள்"

கொரொனாவுக்கு பிறகு நான் உடல் எடையை குறைத்தேன் சிலர் நன்றாக இருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். சிலர் இன்ஸ்டாகிராமில் நேரடியாக கமெண்ட் செய்கிறார்கள்.சிலர் மோசமாக கமெண்ட் செய்கிறார்கள்.

நான் குண்டாக இருந்தபோதும் இப்படித்தான் விமர்சனம் செய்தார்கள் அதைபற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது என கூறினார்.

மேலும் செய்திகள்