< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா? வெளிவந்த புதிய தகவல்
|5 Feb 2023 1:58 PM IST
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன் விலகியதாக கூறப்படுகிறது.
சென்னை,
அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படம் உருவாகும் என கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன் விலகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை தடம், கலகத்தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.