< Back
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜைபோல சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்குகிறாரா இயக்குனர் மிஷ்கின் ?
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜைபோல சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்குகிறாரா இயக்குனர் மிஷ்கின் ?

தினத்தந்தி
|
23 Sept 2024 6:40 PM IST

மிஷ்கின் இயக்கும் 'டிரெயின்' படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பிசாசு 2' படத்தில் சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருந்ததையடுத்து மிஷ்கின் இயக்கும் 'டிரெயின்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சீராக நடந்து வருகிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜைபோல புதிய சினிமா பிரபஞ்சத்தை இயக்குனர் மிஷ்கின் உருவாக்குகிறாரா ? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் இந்த படத்தில் இணைந்ததாக கூறப்படும் ஒரு நடிகரின் வருகை அமைந்துள்ளது.

அதன்படி, முன்னதாக மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் நரேன், தற்போது 'டிரெயின்' படத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது.

'அஞ்சாதே' படத்தில் நரேன் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார், 'டிரெயின்' படத்திலும் நரேன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மிஷ்கின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் மீதான யூகங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இருந்தபோதிலும், 'டிரெயின்' படத்தில் நரேனின் கதாபாத்திரத்திற்கும் 'அஞ்சாதே' படத்துக்கும் தொடர்பிருக்கிறதா? அல்லது இது புதுவிதமான கதாபாத்திரமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


மேலும் செய்திகள்