பிரபல தயாரிப்பாளரை மணக்கிறாரா அனுஷ்கா? - வெளியான தகவல்
|கன்னட சினிமா தயாரிப்பாளரை அனுஷ்கா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
சென்னை,
தமிழில் 'ரெண்டு' படத்தில் அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா, தெலுங்கில் 'அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி' படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
'ஜீரோ சைஸ்' என்ற படத்தில் உடல் எடையை அதிகமாக்கி நடித்த அனுஷ்காவால் பிறகு எடையை குறைக்க முடியவில்லை. கடும் உடற்பயிற்சிகள், சிகிச்சை என்றெல்லாம் முயற்சி செய்தும் ஒல்லியாக முடியவில்லை. இதனால் பட வாய்ப்புகள் குறைந்துபோனது.
அனுஷ்காவுக்கு 42 வயது ஆகியும் இன்னும் திருமணமும் நடக்கவில்லை. ஏற்கனவே 'பாகுபலி'யில் ஜோடியாக நடித்த பிரபாசை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி அதனை இருவரும் மறுத்தனர். மனைவியை பிரிந்த தெலுங்கு இயக்குனர் பிரகாசராவ், நடிகை அனுஷ்காவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி அதுவும் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 45 வயது கன்னட சினிமா தயாரிப்பாளரை அனுஷ்கா திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாகவும் புதிய தகவல் பரவி உள்ளது. இதுவும் உண்மையாக இருக்குமா?, இல்லை வதந்தியா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.