கணவரை பிரிகிறாரா நடிகை சுவாதி ?
|தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை சுவாதி திடீரென்று நீக்கி உள்ளார்
தமிழில் சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற 'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்' பாடலில் சுவாதி நடிப்பு பேசப்பட்டது. போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கும்போதே 2018-ல் கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை சுவாதி திடீரென்று நீக்கி உள்ளார். கணவருடன் சுவாதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருப்பதாகவும் இதனாலேயே திருமண புகைப்படங்களை நீக்கி உள்ளார் என்றும் வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இரண்டு வருடத்துக்கு முன்பும் இதுபோன்ற வதந்தி பரவியது. அதனை சுவாதி மறுத்து இருந்தார்.