< Back
சினிமா செய்திகள்
ஈரானிய பெண்கள் போராட்டம், அங்கிதா பண்டாரிக்கு ஆதரவு; தலைமுடியை வெட்டிய பிரபல இந்தி நடிகை
சினிமா செய்திகள்

ஈரானிய பெண்கள் போராட்டம், அங்கிதா பண்டாரிக்கு ஆதரவு; தலைமுடியை வெட்டிய பிரபல இந்தி நடிகை

தினத்தந்தி
|
17 Oct 2022 3:49 PM IST

ஈரானிய பெண்களின் போராட்டம் மற்றும் அங்கிதா பண்டாரிக்கு ஆதரவாக பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுதலா தனது தலைமுடியை வெட்டியுள்ளார்.



புதுடெல்லி,


பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுதலா ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தனது முடியை வெட்டியுள்ளார். ஈரானிய பெண் அமினியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி உயிரிழந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்து உள்ளார்.

இதேபோன்று, உத்தரகாண்டில் வி.ஐ.பி.களுக்கான ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிய மறைந்த இளம்பெண் அங்கிதா பண்டாரிக்கு ஆதரவாகவும் இந்த முடிவை எடுத்து உள்ளேன் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

முடியை வெட்டி கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இதனை நடிகை ரவுதலா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். அவர் அந்த பதிவில், ஈரானிய அரசுக்கு எதிராக உலக பெண்கள் அணி திரண்டு முடியை வெட்டி கொள்கின்றனர்.

பெண்களை மதியுங்கள். பெண்களின் புரட்சிக்கான சர்வதேச அடையாளம் இது. தலைமுடி பெண்களின் அழகுக்கு அடையாளம். அந்த முடியை பொதுவெளியில் வெட்டி, சமூகத்தின் அழகு நடைமுறைகளை பற்றி பெண்கள் கவலைப்படவில்லை என எடுத்து காட்டியுள்ளனர்.

பெண்கள் எப்படி உடை அணிகின்றனர். நடந்து கொள்கின்றனர் அல்லது வாழ்கின்றனர் என்பது பற்றி எந்தவொரு விசயமும் அல்லது எவரொருவரையும் முடிவெடுக்க பெண்கள் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை என ரவுதலா அதில் தெரிவித்து உள்ளார்.

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ந்தேதி உயிரிழந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். இதனால், ஈரானில் அமைதியற்ற நிலைமை காணப்படுகிறது.

ஈரானில் கடந்த மாதம் அமினிக்கு ஆதரவான போராட்டத்தின்போது, இளம்பெண்களான நிகா ஷாகராமி, ஹதீஸ் நஜாபி, மஹ்சா ஆமினி மற்றும் சரீனா இஸ்மாயில்ஜடே ஆகியோரும் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்