பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் - நடிகை இனியா வேதனை
|பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் என்று நடிகை இனியா அளித்துள்ள பேட்டியில் வேதனை தெரிவித்துள்ளார்.
'வாகை சூடவா', 'மவுன குரு', 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒருநாள்', 'மாசாணி', 'புலிவால்', 'நான் கடவுள் இல்லை' உள்பட பல படங்களில் நடித்தவர், இனியா. தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் ஓரிரு படங்கள் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் சினிமாவில் பாலியல் தொல்லை குறித்து இனியா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
"வாகை சூடவா படத்துக்கு பிறகு எனக்கு பெரிதாக கவனம் ஈர்க்கும் படங்கள் அமையவில்லை. டைரக்டர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் என்னை சரிவர பயன்படுத்தவில்லை என்பதில் எனக்கு வருத்தம் இருக்கிறது'' என்றார்.
நான் நடிக்க வந்த புதிதில், எனது நிறத்தை காரணம் காட்டி சில வாய்ப்புகள் மறுக்கப்பட்டபோது வருத்தம் கொண்டேன். 'மேக்கப்' என்ற ஒன்று இருக்கும்போது, இதை காரணமாக சொல்ல காரணம் என்ன? என்று யோசித்தேன். சினிமாவில் எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் வந்தவள் நான்.
என்னையும் சிலர் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். இதுபோன்ற சிக்கல்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. ஒரு அறையின் கதவை திறந்து வைத்துக்கொண்டு யாரையோ உள்ளே விட்டு, அவர் எல்லை மீறிவிட்டார் என்று சொன்னால் அதற்கு முழு பொறுப்பும் நாம் தான். ஆகையால், கதவை திறக்க வேண்டுமா, வேண்டாமா? என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.