< Back
சினிமா செய்திகள்
ஆர்யா படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்
சினிமா செய்திகள்

ஆர்யா படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்

தினத்தந்தி
|
15 April 2023 9:31 AM IST

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் கடந்த 2021-ல் நேரடியாக ஓ.டி.டியில் வெளியானது. இதில் ஆர்யா ஜோடியாக துஷாரா விஜயன் நடித்து இருந்தார்.

கலையரசன், பசுபதி உள்ளிட்ட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் வந்தனர்.

1960-களில் வட சென்னை பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே நடந்த குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. இதில் ஆர்யா கடும் உடற்பயிற்சிகள் மூலம் தேகத்தை கட்டுடலாக மாற்றி நடித்து இருந்தார். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. திரை பிரபலங்களும் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டினர்.

இதன் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது.

இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. புகழ்பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு சார்பட்டா பரம்பரை படம் தேர்வாகி உள்ளது. இதனை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளனர். இந்த விழா மாஸ்கோவில் வருகிற 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்க உள்ளது.

மேலும் செய்திகள்