< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

சந்தீப் கிஷனின் 'மாயாஒன்' படத்தின் டீசர் வெளியானது

தினத்தந்தி
|
9 May 2024 4:12 PM IST

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயாஒன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். யாருடா மகேஷ் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனுஷ் நடித்துள்ள ராயன் படத்திலும் சந்தீப் நடித்திருக்கிறார். இந்நிலையில், சிவி குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன் புதிய படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு 'மாயாஒன்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.


பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, ஆகிய படங்களை தயாரித்த சிவி குமார். இவர், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது இதன் இரண்டாம் பாகம் மாயாஒன்' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த சந்தீப் கிஷனே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தில் விஜய்யின் கத்தி- படவில்லன் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்