சினிமாவில் பட்ட அவமானங்கள் - நடிகை அதிதி ராவ்
|நடிகை அதிதி ராவ் தான் சினிமாவில் பல அவமானங்களை எதிர்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானவர் அதிதிராவ் ஹைத்ரி. செக்க சிவந்த வானம், ஹேய் சினாமிகா உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அதிதிராவ் அளித்துள்ள பேட்டியில், ''எல்லாத் துறைகளிலும் நல்லது, கெட்டது இருக்கும். சினிமாவிலும் அப்படித்தான். ஒரு படம் தோல்வி அடைந்தால் யாரும் சினிமாவை விட்டு போக மாட்டார்கள். வெற்றி கிடைக்கும் என்ற எண்ணத்துடன் முன்னேறுவார்கள். சிறு வயது முதலே நான் மணிரத்னம் படங்களை பார்ப்பேன். அவரால் தான் சினிமா மீது எனக்கு ஆசை பிறந்தது. சினிமாவில் பல அவமானங்களை எதிர்கொண்டேன். அம்மா முன்பு அழுதால் வேதனைப்படுவார் என்பதற்காக குளியல் அறைக்கு சென்று அழுது தீர்ப்பேன். எனது இரண்டாவது படம் ரிலீசான பிறகு எனக்கு நல்ல பெயர் வந்தது. அந்த படம் பார்த்த மணிரத்னம் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். உனக்குள் ஏதோ மேஜிக் இருக்கிறது. திரையில் உன்னை பார்த்தால் உன் மேல் இருந்து பார்வையை திருப்பவே முடியாது என்று அமிதாப் பச்சன் கூறியதை மறக்கவே முடியாது" என்றார்.