< Back
சினிமா செய்திகள்
Inside Out 2 Breaks Another Record; Pixar Sequel Goes Past Frozen 2 to Become th
சினிமா செய்திகள்

மற்றொரு வரலாற்று சாதனையை உடைத்தெறிந்த 'இன்சைடு அவுட் 2'

தினத்தந்தி
|
27 July 2024 10:40 AM IST

இன்சைடு அவுட் 2 என்ற அனிமேஷன் படத்தில் ரிலே என்ற கதாபாத்திரத்திற்கு அனன்யா பாண்டே குரல் கொடுத்துள்ளார்.

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே. இவர் தற்போது பிரபல அனிமேஷன் படமான இன்சைடு அவுட் 2 என்ற அனிமேஷன் படத்தில் ரிலே என்ற கதாபாத்திரத்திற்கு இந்தியில் குரல் கொடுத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் $100 மில்லியன் வசூலை குவித்து மிகப்பெரிய வசூல் சாதனையொன்றை நிகழ்த்தியது. இதற்கு முன்பாக தி சூப்பர் மரியோ புரோஸ் என்ற அனிமேஷன் படம் வெளியான 2வது வாரத்தில் $92 மில்லியன் வசூலை குவித்திருந்தது.

இந்நிலையில், 'இன்சைடு அவுட் 2' மேலும் ஒரு வரலாற்று சாதனையை உடைத்தெறிந்துள்ளது. அதன்படி, தற்போது இப்படம் $1.46 பில்லியன் வசூலித்துள்ளது. இதன் மூலம் வரலாற்றில் அதிக வசூல் செய்த அனிமேஷன் படமாக 'இன்சைடு அவுட் 2' மாறியுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பிரோசன் 2 $1.45 பில்லியன் வசூலித்து முதலிடத்தில் இருந்தது. தற்போது 'இன்சைடு அவுட் 2', பிரோசன் 2 வை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்