< Back
சினிமா செய்திகள்
குடும்பத்தினர் தாக்கியதால் காயம்... சீரியல் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
சினிமா செய்திகள்

குடும்பத்தினர் தாக்கியதால் காயம்... சீரியல் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

தினத்தந்தி
|
17 Dec 2023 12:25 AM GMT

தனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக வைஷ்ணவி தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தன்ராஜ்(35). இவர் சி.ஐ.டி., பெபண்ணா உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறி வைஷ்ணவி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், "எனக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது. நான் இப்போது மும்பை காஷ்மீரா காவல் நிலையத்தில் இருக்கிறேன். நான் எனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளேன். எனக்கு ஊடகத்தினர், செய்தி நிறுவனங்கள் ஆகியோரின் உதவி தேவை" என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை வைஷ்ணவி தனது நண்பரான ஹிமான்ஷு ஷுக்லா என்பவருக்கு அனுப்பியுள்ளார். அதை அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் நிதின் ஷெராவத்தை திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி தன்ராஜ், குடும்ப பிரச்சினை காரணமாக அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்