< Back
சினிமா செய்திகள்
இந்தியாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம்... பிரபுதேவா நடிக்கும் மின்மேன்
சினிமா செய்திகள்

இந்தியாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம்... பிரபுதேவா நடிக்கும் 'மின்மேன்'

தினத்தந்தி
|
5 April 2024 11:17 AM IST

நடிகர் பிரபு தேவா நடிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் பிரபு தேவா நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் பல்வேறு திரைப்படங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

அந்த வகையில் பிரபு தேவா நடிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளியானது. 'மின்மேன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் பிரபு தேவா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹாரி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரவீன் மற்றும் சதீஷ் இணைந்து இயக்குகின்றனர். இந்த படத்தின் திரைக்கதையை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். காஷ்யப் இசையமைக்கிறார். இந்தியாவின் புதிய சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் 'மின்மேன்' குறித்த பிற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்