ஹாலிவுட் படத்தில் இந்திய நடிகர்கள்
|இந்திய நடிகர்கள் நடித்துள்ள `தி கிரேட் எஸ்கேப்' ஹாலிவுட் படம் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படத்தை சந்தீப் ஜே.எல். இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். ஹாலிவுட்டில் சண்டை கலைஞராக பணியாற்றும் சந்தீப் ஜே.எல். ஏற்கனவே அவுட்ரேஜ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து இருந்தார்.
தற்போது அவரது இரண்டாவது படமாக `தி கிரேட் எஸ்கேப்' உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் தமிழ் வில்லன் நடிகர் சம்பத் ராம், மலையாள நடிகர் பாபு ஆண்டனி ஆகியோரும் நடித்துள்ளனர். சவுத் இந்தியன் யு எஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கைசாட் பட்டேல், பிரோஸ் பட்டேல் ஆகியோர் இசையமைக்கிறார்கள். ஒளிப்பதிவு: கென்டின்.
படம் பற்றி சந்தீப் ஜே.எல் கூறும்போது, ``அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி, உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நாயகன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாபியா கும்பலிடம் சிக்கிக்கொள்ள, மற்றொரு மாபியா குழுவின் தலைவன் காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இரண்டு மாபியா குழுவுக்கும் இடையே மோதல்கள் நடக்கிறது. இறுதியில் நாயகன் காப்பாற்றப்பட்டாரா? என்பதை மெய் சிலிர்க்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுடனுன் சொல்லியிருக்கிறோம்'' என்றார்.