இந்தியன் 3 எப்போது?- அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்
|இந்தியன் 3 எப்போது வெளியாகும் என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்தியன் 3 எப்போது வெளியாகும் என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் அப்டேட் கொடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது தமிழ் வர்ணனையாளர்களாக இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொண்டனர். அப்போது , இந்தியன் 2 வெளியாகி 6 மாதங்களுக்கு பின்னர் இந்தியன் 3 வெளியாகும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். இந்தியன் 2 அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியன் 3 அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.