< Back
சினிமா செய்திகள்
இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சினிமா செய்திகள்

இந்தியன் 2: ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்காதது ஏன்? - விளக்கமளித்த ஷங்கர்

தினத்தந்தி
|
7 July 2024 7:49 AM IST

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சென்னை,

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இப்பட விழாவில் ஷங்கர் பேசுகையில்,

'இந்தியன்-2' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஏன் இசையமைக்கவில்லை? என்று கேட்கிறார்கள். '2.0' படம் எடுத்தபோது, படப்பிடிப்பு முடிந்தாலும் படத்தில் வரும் அந்த ராட்சத பறவைக்கான கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத சூழல் நிலவியது. இதனால் கிராபிக்ஸ் பணிகளை முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்காக ஒரு வருடம் ஆகும் என்ற நிலையில்தான், 'இந்தியன்-2' படத்துக்கான கதையை ரெடி செய்தேன். படப்பிடிப்பும் தொடங்க தயாராக இருந்தோம்.'2.0' படத்தின் எஞ்சிய கிராபிக்ஸ் பணிகளுக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து கொண்டிருந்த சமயம், புதிய படத்துக்கான பாடல்களையும் முடித்துக்கொடுங்கள் என்று அவரிடம் கேட்கமுடியாது. அது மிக மிக கடினம் என்று எனக்கு தெரியும்.

இதற்கிடையில் அனிருத்தின் இசை என்னை கவர்ந்தது. நான் அனைவரது இசையையும் விரும்பும் ஆள். எல்லோருடனும் பணியாற்ற ஆசைப்படுவேன். அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சுமையை ஏற்படுத்த வேண்டாமே என்று நினைத்து அனிருத்திடம் பொறுப்பை ஒப்படைத்தோம். அவ்வளவுதான்'', என்றார்.

மேலும் செய்திகள்