'இந்தியன் 2' : 'சேனாபதி' ரெடி - புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு
|தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'இந்தியன் 2' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் சங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
அதன்படி, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் 'இந்தியன் 2' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இரட்டை வேடத்தில் கமல் நடிக்கும் கதாபாத்திரங்கள் காட்டப்பட்டுள்ளன.
ஒரு கமல் தொப்பி, காக்கி சீருடை அணிந்தும், இன்னொரு கமல் வெள்ளை சட்டை அணிந்தும் போஸ் கொடுத்துள்ளனர். அதனுடன், படக்குழு தமிழ் புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளது. மக்களிடம் ஊழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மீண்டும் 'சேனாபதி' தயாராகி விட்டார்" என்பதை இந்த 'போஸ்டர்' விளக்குகிறது.