< Back
சினிமா செய்திகள்
India is Indira...- Kangana Ranauts Emergency trailer goes viral
சினிமா செய்திகள்

'இந்தியாதான் இந்திரா...'- கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' பட டிரெய்லர் வைரல்

தினத்தந்தி
|
14 Aug 2024 5:21 PM IST

'எமர்ஜென்சி' படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.

மும்பை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தநிலையில், நவ. 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் தள்ளிப்போனது.

சமீபத்தில், இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன், 'இந்தியாதான் இந்திரா & இந்திராதான் இந்தியா!!! நம் நாட்டு வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த பெண்', என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த டிரெய்லர் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்