< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சுதந்திரதின கொண்டாட்டம்... ஆசிரமத்தில் தேசியக்கொடி ஏந்திய ரஜினி
|16 Aug 2023 3:20 PM IST
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பகுதியில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். துறவிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். ரிஷிகேஷில் சுவாமி தயானந்த ஆசிரமத்துக்கு சென்றார். வியாசர் குகை மற்றும் பத்ரிநாத் கோவில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுயம்பு மகா விஷ்ணு கோவில்களுக்கு சென்றும் வழிபட்டார்.
இந்த நிலையில் துவாரஹாத்தில் உள்ள யோக்தா சத் சங்க ஆசிரமத்துக்கு சென்ற ரஜினிகாந்த் அங்கு தேசியக்கொடியை ஏந்தி இந்திய சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. ரஜினி இன்னும் இரு தினங்களில் இமயமலை ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.