< Back
சினிமா செய்திகள்
மைனஸ் 15 டிகிரி குளிரில், பனிநீரில் நடிகை ரகுல் பிரீத்சிங்... அதுவும் பிகினியில்
சினிமா செய்திகள்

மைனஸ் 15 டிகிரி குளிரில், பனிநீரில் நடிகை ரகுல் பிரீத்சிங்... அதுவும் பிகினியில்

தினத்தந்தி
|
7 May 2023 4:19 PM IST

நடிகை ரகுல் பிரீத்சிங் பிகினி உடையில் மைனஸ் 15 டிகிரி குளிரில் பனிநீரில் மூழ்கி, எழுந்து ரசிகர்களுக்கு சவால் விடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

சென்னை,

தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ படங்களில் நடித்துள்ள நடிகை ரகுல் பிரீத்சிங். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த பின் மீண்டும் தேவ் என்ற மற்றொரு படத்தில் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் படங்களில் நடித்து வருகிறார். இந்தி திரைப்படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பவர்களில் ஒருவரான அவர் தினசரி உடற்பயிற்சி செய்வதில் அதிக விருப்பம் உள்ளவர். இதற்காக உடற்பயிற்சி கூடம் கூட தனியாக வைத்து நடத்தி வருகிறார்.

உடற்பயிற்சி செய்த பின்னர், அன்றைய தினம், தன்னிடம் 20 மணிநேரம் வரை கூட வேலை வாங்க முடியும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறினார். அவர் வகை, வகையான ஆடைகள் அணிவதிலும் விருப்பம் உள்ளவர்.

அதிலும், பிகினி உடையையும் அவர் விரும்பி அணிகிறார். ஆனால், இந்த முறை அவர் பிகினியை தேர்வு செய்தது ஒரு சவாலுக்காக என தெரிய வந்து உள்ளது.

நீலம் மற்றும் பச்சை வண்ணம் கலந்த, பூப்போட்ட பிகினி உடையை தேர்வு செய்த அவர், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட உறைபனி பகுதியில் உள்ள நீரில் மூழ்கி, அப்படியே எழுந்து உள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் புதுப்பொலிவுடன் வெளியிட்டு உள்ளார்.

வெளியே வந்ததும், குளிரில் நடுங்கியபடி, எவ்வளவு குளிராக உள்ளது என விவரித்து உள்ளார். மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் யாராவது முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், உங்களால் இதனை செய்ய முடியுமா? என்று ரசிகர்களை நோக்கி சவாலும் விட்டு உள்ளார். அதனால், ஆர்வமுள்ள நபர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? என்ற கோணத்தில் அவர் பதிவிட்டு உள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, எட்டு, ஒன்பது வருடங்களாக திரை துறையில் இருக்கிறேன். நான் செய்ய கூடிய ஒவ்வொரு விசயத்திலும் வெவ்வேறான விசயங்களை மக்கள் பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன். மற்றொரு நபருடன் போட்டி என்று எனக்கு எதுவும் கிடையாது.

நீங்கள் உங்களுடனேயே போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான். அப்படியே பள்ளி காலங்களில் வளர்ந்துள்ளேன். அதனால், நீங்களே உங்களுக்கு பெரிய போட்டியாளர்தான். தெலுங்கில் போட்டியிருக்கிறது, தமிழில் போட்டியிருக்கிறது என நினைத்து கொண்டு, அதற்கேற்ப நான் செயல்பட்டால் மரணித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்