நடிகர் சித்தார்த்துடன் காதலா? நடிகை அதிதிராவ் விளக்கம்
|நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதிராவ் ஹைத்ரியும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன.
அதிதிராவ் ஹைத்ரி தமிழில் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து இருந்தார். செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். சித்தார்த்தும் அதிதிராவ் ஹைத்ரியும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வருகிறார்கள். வலைத்தளங்களிலும் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்று பேசப்படுகிறது.
இந்த நிலையில் அதிதிராவ் அளித்த பேட்டியின்போது உங்களுக்கும் சித்தார்த்துக்கும் காதல் என்று பரவும் தகவலுக்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டபோது, "இதுபோன்ற கேள்வியை ரசிகர்கள் யாரும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை எல்லோரிடமும் சொல்ல வேண்டிய விஷயம் ஏதாவது இருந்தால் நானே நிச்சயமாக சொல்வேன். ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் இருக்கும். சிலருக்கு இதுபோன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள விருப்பம் இருக்கலாம். எங்கள் வேலையை நாங்கள் நேசித்து செய்கிறோம் என்றார்.
சித்தார்த்தை காதலிக்கிறீர்களா? என்பதை சொல்லுங்கள் என்று மீண்டும் கேட்டபோது, "உங்களுக்கு ஏதோ ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு பிடித்தமாதிரி கற்பனை செய்து கொள்வீர்கள்'' என்று பொறுமை இழந்து பதில் சொல்லிவிட்டு சென்றார்.