< Back
சினிமா செய்திகள்
முதல் தடவையாக மோகன்லாலுக்கு ஜோடியாகும் திரிஷா
சினிமா செய்திகள்

முதல் தடவையாக மோகன்லாலுக்கு ஜோடியாகும் திரிஷா

தினத்தந்தி
|
26 May 2022 2:42 PM IST

முதல் முறையாக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார்.

திரிஷா கடந்த 20 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து இருக்கிறார். புதுமுக கதாநாயகிகளின் வருகை திரிஷாவின் மார்க்கெட்டை அசைக்கவில்லை. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

'தி ரோடு' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஜோடியாக நடிக்க உள்ளார். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தை தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் தாமதமானது. மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குகிறார்கள்.

மேலும் செய்திகள்