நடிகையுடன் தகாத உறவு - பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்
|குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி நடிகர் யுவராஜ்குமார் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
பிரபல கன்னட நடிகர் யுவராஜ்குமார். இவர் மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன் ஆவார். யுவராஜ்குமாரும், ஸ்ரீதேவி பைரப்பா என்பவரும் 2019-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்துள்ளனர்.
குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி யுவராஜ்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். தன்னை மனைவி அவமரியாதையாக நடத்தி மனரீதியாக துன்புறுத்துகிறார் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
ஸ்ரீதேவியும், யுவராஜ்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், யுவராஜ் குமாருக்கு சக நடிகையுடன் தகாத உறவு இருக்கிறது என்றும், இருவரும் ஓட்டல் அறையில் ஒன்றாக இருந்தபோது பார்த்து விட்டதால் தன்னை அடித்து வெளியே தள்ளினார் என்றும் குற்றம் சாட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
யுவராஜ் குமாரும், ஸ்ரீதேவியும் டெல்லியில் சந்தித்து காதல் வயப்பட்டனர். ஏழு வருடங்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீதேவி பைரப்பா மைசூரை சேர்ந்தவர். ராஜ்குமார் குடும்பத்தினரால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தை நடத்தி வந்தார்.