< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'சந்திரமுகி-2' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்; நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
|28 Jun 2023 6:14 PM IST
'சந்திரமுகி-2' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்த சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரணாவத் நாயகியாகவும் நடிக்கின்றனர். லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், ரவிமரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார். படவேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், 'சந்திரமுகி-2' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.