2022 பிரபல பட்டியலில் முதல் இடங்களை பிடித்த தென்னிந்திய சினிமா படங்கள் ஒரே ஒரு பாலிவுட் படம்
|ஐஎம்டிபி 2022 ஆம் ஆண்டின் முதல் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது, இதில் ஒரே ஒரு பாலிவுட் படம் மட்டுமே இடம்பெற்று உள்ளது.
சென்னை
தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் வெளிநாட்டு விருது வாங்குவதிலும் அதிகம் காணப்படுகிறது. தென்னிந்திய சினிமாக்கள் தற்போது இந்திய பொழுதுபோக்கு சந்தையை ஆளுகின்றன. சமீபத்தில், ஐஎம்டிபி 2022 ஆம் ஆண்டின் முதல் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது, இதில் ஒரே ஒரு பாலிவுட் படம் மட்டுமே இடம்பெற்று உள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலியின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் படமான 'ஆர்ஆர்ஆர்' முதலிடத்தைப் பிடித்து உள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் வருமாறு:-
1.ஆர்.ஆர்.ஆர்
2. தி காஷ்மீர் பைல்ஸ்
3.கே.ஜி.எப்-2
4.விக்ரம்
5.காந்தார
6.ராக்கெட்ரி: நம்பி விளைவு
7.மேஜர்
8.சீதா ராமம்
9.பொன்னியின் செல்வன்: பாகம் ஒன்று
10. 777 சார்லி
ஆர்ஆர்ஆர் படம் மார்ச் மாத தொடக்கத்தில் ஐந்து மொழிகளில் வெளியானது, முக்கியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி. ஆர்ஆர்ஆர் கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்று உள்ளது.
'தி காஷ்மீர் பைல்ஸ்' விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறுவதை படம் காட்டுகிறது.