< Back
சினிமா செய்திகள்
உங்களை போன்று நானும் காத்திருக்கிறேன் -வாடிவாசல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
சினிமா செய்திகள்

உங்களை போன்று நானும் காத்திருக்கிறேன் -வாடிவாசல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

தினத்தந்தி
|
27 Dec 2023 11:23 PM IST

நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 3டி முறையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இப்படம் குறித்த அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், "வாடிவாசல் படத்தின் இசை எல்லாம் ரெடியாகிவிட்டது. வெற்றிமாறன் அவரின் பட பணிகளை முடித்த பின் வாடிவாசல் படத்தின் பணிகள் தொடங்கும். உங்களை போன்று நானும் காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்