என்னை இன்னும் ஆபாச பட நடிகையாகவே பார்கிறார்கள் - வருத்தத்தில் சன்னி லியோன்
|ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய தமிழ் படங்களிலும் சன்னி லியோன் நடித்து இருக்கிறார்.
மும்பை,
சன்னி லியோன் தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்து பல படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.
இவர் தமிழில் வட கறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும் ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.தற்போது சன்னி லியோன் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதில், "நான் ஆபாச பட நடிகையாக தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறேன். அந்த படங்களில் நடித்து இருப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் சினிமாவுக்கு வந்த பிறகு அப்படி இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். வெளியில் பல்வேறு நல்ல காரியங்களையும் செய்து வருகின்றேன். மேலும் ஒரு ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகின்றேன்.
ஆனால் இந்த விஷயங்களை யாரும் பேசுவது இல்லை. எனது பழைய விஷயங்களை பற்றியே பேசுகின்றனர். என்னை ஆபாச பட நடிகை என்ற கோணத்திலேயே இன்னும் பார்க்கின்றனர். இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. தற்போது டெல்லியில் ஒரு ஓட்டல் திறந்து இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.