''நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது'' உள்ளாடை சர்ச்சை குறித்து பாவனா விளக்கம்
|உள்ளாடை சர்ச்சை குறித்து நடிகை பாவனா ‘‘நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது’’ என விளக்கம் அளித்துள்ளார்.
திரைத்துறையினரை தொடர்ந்து கவுரவப்படுத்தி வரும் துபாய் அரசாங்கம், சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கியது. அந்த விழாவுக்கு வந்த பாவனா அணிந்திருந்த உடை குறித்து பெரும் சர்ச்சை வெடித்தது. உள்ளாடை அணியாமல் நிகழ்ச்சிக்கு வருவதா? என்று கண்டனங்களும் வலுத்தன. இதற்கு நடிகை பாவனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
"நான் உள்ளாடை எதுவும் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்று தவறான கருத்துகளை கூறி வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியின் போது எனது உடல் நிறத்தில் 'ஸ்லிப்' அணிந்திருந்தேன். இந்த உடையை அணியும் பெண்களுக்கு அது நன்றாகவே தெரியும். என்னைப் பற்றி அவதூறு பரப்புவதையே சிலர் வேலையாக வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது. நாகரிக ஆடை அணிந்தாலும் பண்பாட்டை மீறியது இல்லை."
இவ்வாறு பாவனா கூறியுள்ளார். இதன் மூலம் உள்ளாடை குறித்த சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.