< Back
சினிமா செய்திகள்
நான் கனவில் வாழ்கிறேன் ஷாருக்கான் பாராட்டால் நெகிழ்ந்த அட்லீ
சினிமா செய்திகள்

"நான் கனவில் வாழ்கிறேன்" ஷாருக்கான் பாராட்டால் நெகிழ்ந்த அட்லீ

தினத்தந்தி
|
12 July 2023 1:50 PM IST

டுவிட்டரில் அட்லீ குறித்தும் அவரது மனைவி மற்றும் அவரது குழந்தை குறித்தும் ஷாருக்கான் பதிவிட்டிருந்தார்.

சென்னை

அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜவான் படத்தை ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கவுரி கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. நேற்று முன்தினம் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில் முன்னோட்டம் குறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஷாருக்கான், அட்லீ குறித்தும் அவரது மனைவி மற்றும் அவரது குழந்தை குறித்தும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அட்லீ, "மன்னர்களின் கதைகளைப் படிப்பதில் இருந்து நிஜமான ஒருவருடன் பயணத்தைத் தொடங்குவது வரை, நான் கனவில் வாழ்கிறேன் என்று நினைக்கிறேன்.

இந்தப் படம் என்னுடைய வரம்புகளுக்கு மீறியது. அங்கு நான் விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக்கொண்டேன். கடந்த 3 வருடங்களில் நான் உன்னிப்பாகக் கண்ட சினிமா மீதான உங்கள் ஆர்வமும், நீங்கள் உழைத்த கடின உழைப்பும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது" எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்