< Back
சினிமா செய்திகள்
சமந்தா பாதையில் இலியானா
சினிமா செய்திகள்

சமந்தா பாதையில் இலியானா

தினத்தந்தி
|
18 Sept 2022 7:26 AM IST

சமந்தா போல இலியானாவும் வெப் தொடரில் நடிக்கிறார்.

இந்திய சினிமாவின் 'இடுப்பழகி' என்று வர்ணிக்கப்படும் இலியானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழில் 'கேடி', 'நண்பன்' படங்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்த இலியானா 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இலியானா நடிப்பில் 2 இந்தி படங்கள் வெளி வர தயாராக இருக்கின்றன. இதற்கிடையில் வெப் தொடரில் நடிக்க இலியானா சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

சமந்தா வெப் தொடரில் நடித்து தான், தற்போது 'பான் இந்தியா ஸ்டார்' ஆக வலம் வருகிறார். அவரது இந்த அசுர வளர்ச்சியை பார்த்து முன்னணி நடிகைகள் வியந்து வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா போல இலியானாவும் வெப் தொடரில் நடிக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் இந்த தொடரை கரிஷ்மா கோலி இயக்குகிறார்.

இலியானாவை தொடர்ந்து முன்னணி இந்தி நடிகைகளும் வெப் தொடரில் நடிப்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறார்களாம்.

மேலும் செய்திகள்