வெப் தொடரில் இலியானா
|வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் நடிகை இலியானாவும் வெப் தொடரில் நடிக்கிறார்.
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் முன்னனி நடிகர், நடிகைகள் பார்வை அவற்றின் பக்கம் திரும்பி உள்ளது. பிரபல நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். சமந்தாவுக்கு பேமிலிமேன் 2 வெப் தொடர் பெயர் வாங்கி கொடுத்தது. இதன் மூலம் அவருக்கு இந்தி பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. இன்னொரு புறம் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் ஒதுக்கப்பட்ட நடிகர், நடிகைகளுக்கும் வெப் தொடர்கள் கைகொடுக்கின்றன. இந்த நிலையில் நடிகை இலியானாவும் வெப் தொடரில் நடிக்கிறார். இவர் தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக இலியானாவுக்கு படங்கள் இல்லை. இதனால் வெப் தொடருக்கு வந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தயாராகும் இந்த தொடர் பற்றிய முழு விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.