< Back
சினிமா செய்திகள்
காதல் முறிவால் மகிழும் இலியானா
சினிமா செய்திகள்

காதல் முறிவால் மகிழும் இலியானா

தினத்தந்தி
|
21 July 2022 2:00 PM IST

காதல் முறிவு என்பது தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல சம்பவம் என்கிறார் இலியானா.

தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமான இலியானா தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராபர் அண்ட்ரூ நிபோனும் காதலித்தனர். பிறகு காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

காதல் முறிவு வலியில் இருந்து மீண்டது குறித்து இலியானா அளித்த பேட்டியில், "காதல் முறிவு வேதனையில் இருந்து மீள்வதற்கான சிகிச்சைக்கு சென்றபோது மனநல ஆலோசகர் என்னிடம் உனக்குள் உள்ள சிறப்பு அம்சங்களின் மீது கவனத்தை செலுத்து என்று சொன்னார், நான் அதையே கடைப்பிடித்தேன். குடும்ப உறுப்பினர்கள், சினேகிதர்களின் மதிப்பை தெரிந்து கொண்டேன். நான் மன அழுத்தத்தில் இருந்தபோது அதில் இருந்து வெளியே வருவதற்காக எனக்கு அவர்கள் தான் ஆதரவாக நின்றார்கள். இப்போது எத்தனை பேர் விமர்சனம் செய்தாலும் நான் கண்டு கொள்வதே இல்லை. ஏனென்றால் என்னை நான் நேசிக்கிறேன். காதல் முறிவு ஒரு வேதனை அல்ல. அது ஒரு வரம். நம்மை நாம் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு. அந்த நிலையில் என் வாழ்க்கையில் எத்தனையோ பாடங்களை கற்றுக்கொண்டேன். எனவே காதல் முறிவு என்பது என் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல சம்பவம்'' என்றார்.

மேலும் செய்திகள்