மீண்டும் காதலில் விழுந்த இலியானா
|நடிகை இலியானா பிரபல பாலிவுட் நடிகையின் சகோதரர் மீது காதல் வயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமாவின் 'இடுப்பழகி' என்று அழைக்கப்படும் இலியானாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் இவர் விஜய்க்கு ஜோடியாக 'நண்பன்' படத்தில் நடித்திருந்தார்.
இலியானா சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபன் என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே (லிவிங் டு கெதர்) கணவன்-மனைவியாகவும் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. ஒருகட்டத்தில் இந்த உறவும் முறிந்து போனது. இதனால் இலியானா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கடந்த சில ஆண்டுகளாகவே படங்களில் நடிப்பதை இலியானா தவிர்த்து வருகிறார். இந்தநிலையில் செபாஸ்டின் லாரன்ட் மைக்கேல் என்பவரை இலியானா காதலித்து வருவதாகவும், கடந்த 6 மாதங்களாக இருவரும் ஜோடியாக சுற்றித்திரிவதாகவும் கூறப்படுகிறது.
செபாஸ்டின் லாரன்ட் மைக்கேல் முன்னணி இந்தி நடிகை கத்ரீனா கைபின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.