< Back
சினிமா செய்திகள்
மைக்கேல் டோலனுடனான திருமணத்தை உறுதிப்படுத்திய இலியானா
சினிமா செய்திகள்

மைக்கேல் டோலனுடனான திருமணத்தை உறுதிப்படுத்திய இலியானா

தினத்தந்தி
|
28 April 2024 6:48 PM IST

நீண்ட காலமாக தனது கணவர் குறித்து தகவல்களை மூடி மறைத்து வந்த நடிகை இலியானா, சமீபத்திய பேட்டியில் தனது திருமண வாழ்க்கை பயணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகர் இலியானா டி குரூஸ். கேடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின், விஜயுடன் நண்பன் என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, பாலிவுட் படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இருப்பினும், அவரது கணவர் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இதனை அடுத்து, தனது கணவருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டார். அப்போது, அவரது முகம் பிளர் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், "என் மீது நான் அக்கறை கொள்ள மறந்த நாட்களில் கூட அவர் என் மீது அக்கறை காட்டினார். நான் சோகமாக இருக்கும் போது என் கண்ணீரைத் துடைத்து, என்னை பிடித்துக் கொண்டார். என்னை சிரிக்க வைக்க முட்டாள்தனமான காமெடிகளைச் சொல்லி சிரிக்க வைப்பார். எனக்கு என்ன தேவையோ அதை அறிந்து செயல்படுகிறார்" என்றார்.

தனது கணவரது அடையாளத்தை நீண்ட காலமாக மூடி மறைத்து வந்த இலியானா, அதன் பின் வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் டோலன் தான் தனது கணவர் என்றும், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைக்கு கோவா பீனிக்ஸ் என்று பெயரிட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது திருமண வாழ்க்கை பயணத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது, "திருமண வாழ்க்கை மிகவும் அழகாக செல்கிறது. என் கணவரை எவ்வளவு விரும்புகிறேன் என்று சொல்வது கடினம். நான் ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்ல வரும் போது, எதிர்பாராத நிகழ்வு நடந்து விடுகிறது. என்னுடைய மோசமான நேரங்களையும், சிறப்பான நேரங்களையும் அவர் பார்த்திருக்கிறார். என்னுடன் இருந்திருக்கிறார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்