< Back
சினிமா செய்திகள்
இளையராஜா இசையில் தனுஷ் பாடிய ஒன்னோட நடந்தா.. பாடல் வெளியீடு
சினிமா செய்திகள்

இளையராஜா இசையில் தனுஷ் பாடிய 'ஒன்னோட நடந்தா..' பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
8 Feb 2023 7:24 PM IST

விடுதலை படத்தில் இருந்து தனுஷ் பாடிய ‘ஒன்னோட நடந்தா..’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' திரைப்படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இளையராஜா இசையில் 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகா எழுதிய இந்த பாடலை தனுஷ், அனன்யா பட் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


மேலும் செய்திகள்