< Back
சினிமா செய்திகள்
Ilaiyaraaja sends legal notice to Manjummel Boys makers; producers claim having acquired rights
சினிமா செய்திகள்

இளையராஜா நோட்டீசுக்கு விளக்கம் கொடுத்த 'மஞ்சுமல் பாய்ஸ்' படக்குழு

தினத்தந்தி
|
25 May 2024 8:21 AM IST

இளையராஜா நோட்டீசுக்கு ‘மஞ்சுமல் பாய்ஸ்' படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.

சென்னை,

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் படம் கேரளாவிலும், தமிழ் நாட்டிலும் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்து 1990-ல் வெளியான 'குணா' படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே' என்ற பாடலை பயன்படுத்தி இருந்தனர். இது படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததாக பேசப்பட்டது.

கண்மணி அன்போடு பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

"பாடலை உருவாக்கிய இளையராஜவே பாடலுக்கான முழு உரிமையும் பெற்றவர். அவரிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதால் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும்'' என்று நோட்டீசில் கூறப்பட்டு இருந்தது.

இளையராஜா நோட்டீசுக்கு படக்குழு அளித்துள்ள விளக்கத்தில், "கண்மணி அன்போடு பாடலை உரிமம் பெற்றே பயன்படுத்தி உள்ளோம். இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை'' என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்