< Back
சினிமா செய்திகள்
எனது படத்தை புறக்கணிப்பதா? நடிகர் அமீர்கான் வருத்தம்
சினிமா செய்திகள்

எனது படத்தை புறக்கணிப்பதா? நடிகர் அமீர்கான் வருத்தம்

தினத்தந்தி
|
3 Aug 2022 8:27 AM IST

தனது படத்தை புறக்கணிக்க வேண்டாம் என்று அமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சத்தா இந்திப் படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.

பாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக லால் சிங் சத்தா உருவாகி உள்ளது. இந்த நிலையில் லால் சிங் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

நாட்டில் சகிப்பு தன்மை குறைந்து வருவதால் குழந்தைகள் பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று எனது மனைவி அறிவுறுத்தினார் என்றும், சகிப்பு தன்மைக்கு எதிராக நடக்கும் செயல்களை அரசு கண்டிக்க வேண்டும் என்றும் சில வருடங்களுக்கு முன்பு அமீர்கான் பேசிய வீடியோக்களை தற்போது சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வற்புறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் தனது படத்தை புறக்கணிக்க வேண்டாம் என்று அமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "எனக்கு இந்தியாவை பிடிக்காது என்று சிலர் நம்புவது வருத்தம் அளிக்கிறது. நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். சிலர் என்னைப் பற்றி தவறாக நினைப்பது துரதிர்ஷ்டமானது. என் படங்களைப் புறக்கணிக்காமல் தயவு செய்து போய் பாருங்கள்'' என்றார்.

மேலும் செய்திகள்