< Back
சினிமா செய்திகள்
என்னை படுக்கைக்கு அழைத்தால் முத்தம் கொடுப்பேன் -  நடிகை பாப்ரி கோஷ்
சினிமா செய்திகள்

என்னை படுக்கைக்கு அழைத்தால் முத்தம் கொடுப்பேன் - நடிகை பாப்ரி கோஷ்

தினத்தந்தி
|
21 Jan 2024 5:24 PM IST

சினிமாவில் பரவலாக சொல்லப்பட்டு வரும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை குறித்து பாப்ரி கோஷ் துணிச்சலாக பேசியுள்ளார்.

'டூரிங் டாக்கீஸ்', 'ஓய்', 'சக்க போடு போடு ராஜா', 'பைரவா', 'விஸ்வாசம்' போன்ற படங்களில் நடித்தவர், பாப்ரி கோஷ். தெலுங்கு, பெங்காலி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் பரவலாக சொல்லப்பட்டு வரும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை குறித்து பாப்ரி கோஷ் துணிச்சலாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டுமே படவாய்ப்பு என்று யாராவது என்னிடம் கேட்டால், உடனே முடியாது என்று சொல்லிவிட மாட்டேன்.

அந்த நபரின் வீட்டுக்கு சென்று, அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் முன்பே அவருக்கு முத்தம் கொடுப்பேன். என்னை யாராவது கேட்டால், நடந்த விஷயத்தை சொல்வேன். அதன்பிறகு அந்த நபரை குடும்பத்தாரே கவனித்துக் கொள்வார்கள்.

பொதுவாகவே இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கும் பெண்கள் கூச்சம், பயம் போன்றவற்றால் உண்மைகளை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அது தவறு. கூச்சத்தை நாம் தூக்கி எறிந்தால்தான், அப்படி கேட்கும் தைரியம் அந்த நபர்களை விட்டு போகும். நமக்கு தன்மானம் மிக முக்கியம். எனவேதான் இதுபோன்ற பிரச்சினைகளில் பொறுமை தேவையில்லை. துணிச்சலாக முடிவு எடுங்கள்', என்றார்.

மேலும் செய்திகள்