< Back
சினிமா செய்திகள்
நீங்கள் ஹாலிவுட்டில் படம் எடுக்க விரும்பினால்... - ஜேம்ஸ் கேமரூன் அழைப்பால் திகைத்த ராஜமவுலி
சினிமா செய்திகள்

'நீங்கள் ஹாலிவுட்டில் படம் எடுக்க விரும்பினால்...' - ஜேம்ஸ் கேமரூன் அழைப்பால் திகைத்த ராஜமவுலி

தினத்தந்தி
|
21 Jan 2023 3:07 PM IST

ஆர்.ஆர்.ஆர். டைரக்டர் ராஜமவுலிக்கு அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பை,

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருது வென்றது.

கோல்டன் குளோப் விருதில் ஒரிஜினல் பாடல் பிரிவில் சிறந்த பாடலாக 'நாட்டு நாட்டு' பாடல் விருது வென்றுள்ளது. நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி நிகழ்ச்சி மேடையில் ஏறி கோல்டன் குளோப் விருதை பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆர். திரைப்பட டைரக்டர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் ஹாலிவுட் திரைத்துறையின் முன்னணி டைரக்டரும் அவதார் திரைப்பட டைரக்டருமான ஜேம்ஸ் கேமரூனை ராஜமவுலி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு டைரக்டர்களும் பல்வேறு ருசிகர தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, நீங்கள் இங்கு (ஹாலிவுட்டில்) படம் எடுக்க விரும்பினால் சொல்லுங்கள் நாம் அது குறித்து பேசுவோம் என்று ராஜமவுலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்